உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும்


உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும்
x

கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு-ராமநல்லூர் இடையே உயர்மட்ட பாலம் கட்டித்தர வேண்டும் என்று பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தஞ்சாவூர்

பாபநாசம்:

பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம்

தஞ்சை வடக்கு மாவட்ட பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டம் பாபநாசத்தில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ராம்குமார் தலைமையில் நடந்தது. பா.ம.க. பொறுப்பாளர்கள் வாசுதேவன், கபிஸ்தலம் சிங்காரம், அய்யம்பேட்டை தமிழ்ச்செல்வன், முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் நகர பொறுப்பாளர் சுந்தர்ராஜன் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், ஆடுதுறை பேரூராட்சி ்தலைவருமான ம.க. ஸ்டாலின், மாவட்ட தலைவர் சங்கர், வன்னியர் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் ராஜசேகர், மாவட்ட பொறுப்பாளர்கள் ரமேஷ், குமார், வினோத் சுந்தரம் உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

விவசாயிகளுக்கு பயிர்க்கடன்

பாபநாசம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்த அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க்கடன் வழங்க வேண்டும்,கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் மூலம் இயக்கப்படும் பஸ்கள் பாதியளவிற்கு கூட இயங்கவில்லை, மாணவர்களும், பொதுமக்களும் நீண்ட நேரம் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. எனவே அனைத்து பஸ்களையும் உடனே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்

கொள்ளிடம் ஆற்றில் குடிகாடு-ராமநல்லூர் இடையே உயர்மட்ட பாலம் உடனடியாக கட்டித்தர வேண்டும்.பாபநாசம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றின் அருகே உள்ள மதுபான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வழுத்தூர் அறிவு நன்றி கூறினார்.


Next Story