ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் தங்க சங்கிலி திருட்டு
சங்கரன்கோவிலில் ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் தங்க சங்கிலி திருடப்பட்டது.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ஐந்து வீட்டு லைன் தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவருடைய மனைவி துளசி மணி (வயது 55). இவர் சங்கரன்கோவில் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். துளசி மணி நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்வதற்காக சங்கரன்கோவில் பயணிகள் விடுதி முன்பு பஸ்சில் ஏறினார்.
பஸ் சங்கரன்கோவில் என்.ஜி.ஓ. காலனியில் வரும்போது துளசிமணி கழுத்தில் கிடந்த 11 பவுன் தங்க சங்கிலி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story