அருமனை அருகே வீடுபுகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை - வாலிபர் கைது
அருமனை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை,
குமரி மாவட்டம் அருமனை அருகே வலிய விளையை பகுதியை சேர்ந்தவர் ஜெரின்(வயது22). அவர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு வீட்டில் நுழைந்து, தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் ஜெரின் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று ஜெரின் வீட்டில் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக போலீசார் ஜெரினின் வீட்டுக்கு சென்று அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.
Related Tags :
Next Story