பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு.? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு


பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பு.? விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
x

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து ஓரிரு நாளில் தமிழக அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின்போது ரொக்கப்பணத்துடன் கரும்பு, பச்சரிசி போன்ற பரிசு தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.

சமீபத்தில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கும், வரலாறு காணாத கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கும் தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைக்கு தலா 6,000 ரூபாயும், தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களின் குடும்ப அட்டைக்கு தலா 1,000 ரூபாயும் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு பரிசு பொருட்கள் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. வருகிற பொங்கல் பண்டிகைக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு தொகுப்பை வழங்க அரசு திட்டமிட்டு வருகிறது.

இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும், ஜனவரி 2-வது வாரத்தில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story