அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்; பொதுமக்கள் அவதி


அடிக்கடி மூடப்படும் ரெயில்வே கேட்; பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Sept 2023 12:15 AM IST (Updated: 13 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே செயல்படும் ரெயில்வே கேட்டால் பொதுமக்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர் இதனால் வாகன ஓட்டிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

சிவகங்கை

மானாமதுரை

மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே செயல்படும் ரெயில்வே கேட்டால் பொதுமக்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர் இதனால் வாகன ஓட்டிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

ரெயில்வே கேட்

மானாமதுரை பழைய பஸ் நிலையம் அருகே ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் காலை நேரங்களில் அடிக்கடி மூடுவதால் பொதுமக்களும், மாணவர்களும், முதியோர்களும் தினந்தோறும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக காலை நேரங்களில் மதுரையில் இருந்தும் ராமநாதபுரத்தில் இருந்தும் அடிக்கடி ரெயில்கள் வருகிறது.

மேலும் சரக்கு ரெயில்கள் கடந்து சென்றால் 15 முதல் 20 நிமிடம் வரை காத்திருக்க வேண்டி உள்ளது. இதனால் ரெயில்வே காலனி பகுதியில் இருந்து செல்லும் வாகனங்களாலும் அதேபோல் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்களும் ரெயில்வே கேட்டில் நீண்ட நேரம் காத்திருப்பதால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

இதனால் அப்பகுதியில் காலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு தீர்வாக ரெயில்வே மேம்பாலம் அல்லது சுரங்க வழி பாதை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மேம்பாலம் அமைக்கப்படும்பட்சத்தில் நான்கு வழிச்சாலையை இணைக்கும் வகையில் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story