50 அணிகள் பங்கேற்றுள்ள கால்பந்து போட்டி


50 அணிகள் பங்கேற்றுள்ள கால்பந்து போட்டி
x

50 அணிகள் பங்கேற்றுள்ள கால்பந்து போட்டி நடந்தது.

திருச்சி

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் திருச்சி கல்வி மாவட்ட 'சி' மண்டலத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆண்கள் கால்பந்து போட்டி திருச்சியில் நேற்று தொடங்கியது. 14 வயதுக்கு உட்பட்டோர், 17 வயதுக்கு உட்பட்டோர், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் நடக்கும் இந்த போட்டிகளில் 50 பள்ளிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றுள்ளன. நாக்-அவுட் முறையில் நடக்கும் இந்த போட்டிகளை தலைமை ஆசிரியர் ஞானசுசிதரன், போட்டி ஒருங்கிணைப்பாளர் கில்சன் சாந்தகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் தெப்பக்குளம் பிஷப்ஹீபர் பள்ளி 1-0 என்ற கோல் கணக்கில் செயின்ட் ஜோசப் பள்ளி அணியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலும் அந்த பள்ளி அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் விளையாட தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story