கரும்பு தோட்டத்தில் தீ விபத்து


கரும்பு தோட்டத்தில் தீ விபத்து
x

திருப்பத்தூர் அருகே கரும்பு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் கரும்புகள் எரிந்து நாசமாயின.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா சவுளூர் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 54). இவருக்கு சொந்தமான நிலத்தில் சுமார் 16 ஏக்கர் அளவில் கரும்பு சாகுபடி செய்திருந்தார். கரும்பு வெட்டப்பட இருந்த நிலையில் நேற்று கரும்பு தோட்டத்தின் மீது சென்ற மின் கம்பி உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு 16 ஏக்கர் அளவிலான கரும்பு தோட்டம் முழுவதும் தீ பரவியது. அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குடத்தில் தண்ணீர் வாரி இறைத்தும், தென்ன ஓலைகளை கொண்டும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். அதற்குள் 16 ஏக்கர் அளவிலான கரும்புத் தோட்டம் எரிந்து நாசமானது.


Next Story