பழக்கடையில் தீ விபத்து
குன்னூர் அருகே நள்ளிரவில் பழக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.ஒரு லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
குன்னூர்.
குன்னூர் அருகே நள்ளிரவில் பழக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.ஒரு லட்சம் பொருட்கள் எரிந்து நாசமானது.
தீ விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி பகுதியில் பழங்கள், தேநீர் என 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 2 மணியளவில் வெங்கடேஷ் என்பவருக்கு சொந்தமான சாலையோர பழக்கடையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து தீ பற்றி எரிந்தது. அப்பகுதியே புகை மண்டலமாக மாறியது.
அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் தீ விபத்து குறித்து குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ரூ.ஒரு லட்சம் பொருட்கள்
தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அனைத்தனர். ஆனால், மரப் பொருட்களால் ஆன கடை என்பதால் சில நிமிடங்களுக்குள் கடை முழுவதும் எரிந்து விட்டது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டு இருக்கலாம் என தீயணைப்பு துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்து உள்ளது. மேலும் தீ விபத்தில் பழக்கடையில் ரூ.ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து குறித்து குன்னூர் நகர போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். முன்னதாக தீ விபத்து காரணமாக அந்த சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டதால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயை அணைத்த பின்னர் போக்குவரத்து சீரானது. இதையும் தீயணைப்புத் துறையினர் சரி செய்தனர். நள்ளிரவில் பழக்கடையில் ஏற்ட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.