நெற்பயிரை தீ வைத்து எரித்து நிலத்துக்கு டிராக்டரை கொண்டு சென்ற விவசாயி கைது


நெற்பயிரை தீ வைத்து எரித்து நிலத்துக்கு டிராக்டரை கொண்டு சென்ற விவசாயி கைது
x

நெற்பயிரை தீ வைத்து எரித்து நிலத்துக்கு டிராக்டரை கொண்டு சென்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த ஜோதிமாநகரத்தைச் சேர்ந்த தம்பதியர் சேகர்-பச்சையம்மாள் (வயது 45). இவர்களுடைய நிலத்துக்கு பக்கத்தில் விவசாயி கோவிந்தசாமி (55) என்பவரின் நிலம் உள்ளது. நிலத்துக்கு செல்லும் வழி தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்படுவது வழக்கம். பச்சையம்மாள் தனது நிலத்தில் நெல் சாகுபடி செய்துள்ளார். நெற்பயிர் அறுவடை பருவத்தில் உள்ளது.

கோவிந்தசாமி தனது நிலத்தில் பயிர் சாகுபடி செய்வதற்காக டிராக்டரை கொண்டு செல்ல முடிவு செய்தாா். நிலத்துக்கு டிராக்டரை கொண்டு ெசல்ல வழியில்லாததால், பச்சையம்மாள் நிலத்தில் அறுவடை பருவத்தில் இருந்த நெற்பயிரின் ஒரு பகுதியை தீயிட்டு எரித்துவிட்டு, அந்த வழியாக டிராக்டரை கொண்டு சென்றுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த பச்சையம்மாள் கோவிந்தசாமியை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது இரு தரப்பினருக்கும் இடைேய தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த கோவிந்தசாமி, மனைவி பூங்கோதை, மகன் ஜோதி ஆகியோர் சேர்ந்து பச்சையம்மாளை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் பச்சையம்மாள் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தசாமியை கைது செய்தார். மேலும் கோவிந்தசாமியின் மனைவி பூங்கோதை, மகன் ஜோதி ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story