நடுவீரப்பட்டு அருகே இரு தரப்பினரிடையே தகராறு; 3 பேர் காயம்


நடுவீரப்பட்டு அருகே இரு தரப்பினரிடையே தகராறு; 3 பேர் காயம்
x

நடுவீரப்பட்டு அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 3 பேர் காயமடைந்தனர்.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை ஆராய்ச்சி குப்பத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய தங்கை காசியம்மாள். சம்பவத்தன்று பெருமாள் நடத்தி வரும் பஜ்ஜி கடை முன்பு காசியம்மாள், முந்திரிக்கொட்டை தோலை போட்டதாக கூறப்படுகிறது‌. இதையடுத்து பெருமாள், முந்திரிக்கொட்டை தோலை எடுக்கக் கூறிய போது அவருக்கும் காசியம்மாளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த காசியம்மாள் மகன் ஜெயகுமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள், பெருமாளின் மனைவி ஜெயலட்சுமி, மகன் ராஜமுருகன் ஆகியோரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும் கடையில் இருந்த கண்ணாடி பெட்டியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதேபோல், ஜெயக்குமாரை ராஜமுருகன், ஜெயலட்சுமி ஆகியோர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தகராறில் காயமடைந்த ஜெயலட்சுமி, ராஜமுருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கடலூர் அரசு ஆஸ்பத்திாியில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த தனித்தனி புகார்களின் பேரில் இருதரப்பை சேர்ந்த ஜெயக்குமார், காசியம்மாள், ராஜேந்திரன், ஜெயராஜ் மற்றும் ராஜமுருகன், ஜெயலட்சுமி ஆகியோர் மீது நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story