பயன்பாட்டில் இல்லாமல் பாழடைந்து கிடக்கும் போலீசார் குடியிருப்பு


பயன்பாட்டில் இல்லாமல் பாழடைந்து கிடக்கும் போலீசார் குடியிருப்பு
x

வெள்ளியணையில் பயன்பாட்டில் இல்லாமல் பாழடைந்து கிடக்கும் போலீசார் குடியிருப்பு குறித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

கரூர்

போலீஸ் நிலையம் தொடக்கம்

கரூா் மாவடடம் தாந்தோன்றி ஒன்றியத்தை சோ்ந்த வெள்ளியணை, ஜெகதாபி, உப்பிடமங்கலம், ஏமூா், மணவாடி, மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், காக்காவாடி, கே.பிச்சம்பட்டி, கடவூா் ஓன்றியத்தை சோ்ந்த காளையபட்டி ஆகிய 10 தாய் கிராமங்களை சோ்ந்த 151 குக்கிராமங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை கண்டறிந்து தண்டனை பெற்றுத்தரவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும் வெள்ளியணையில் 1950-ம் ஆண்டு போலீஸ் நிலையம் தொடங்கப்பட்டது. இதற்காக போலீஸ் நிலைய கட்டிடமும், இங்கு பணிபுாியும் போலீசாருக்கு குடியிருப்புகளும் அதே காலகட்டத்தில் கட்டப்பட்டது.

புதிய கட்டிடம்

இந்த இரு கட்டிடங்களும் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் சுவர்களில் விாிசல் ஏற்பட்டும் காங்கீாிட்கள் பெயர்ந்தும் இடிந்து விழக்கூடிய நிலை ஏற்பட்டது. இதனால் போலீஸ் நிலையத்தையும், போலீசாாின் குடியிருப்புகளையும் இடித்து விட்டு புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோாிக்கை வைத்தனர்.இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் போலீசாா் குடியிருப்புகள் கட்டப்படாததால் இங்கு பணிபுரியும் போலீசாா் தாந்தோன்றிமலை, கரூா் ஆகிய பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி உள்ளனர்.

கோரிக்கை

இதனால் பணிக்கு வருவதிலும், பணிமுடிந்து ஓய்வுக்கு செல்வதிலும் போலீசாருக்கு வீண் அலைச்சலும், காலவிரயமும் ஏற்படுவதுடன் பொதுமக்களின் சேவையிலும் தாமதம் உண்டாகிறது. எனவே போலீசாாின் பழைய குடியிருப்புகளை இடித்துவிட்டு அதே பகுதியில் அனைத்து வசதிகளுடன் கூடிய பதிய குடியிருப்புகளை கட்டித்தர வேண்டும் சமூக ஆா்வலர்கள், பொதுமக்களும் அரசுக்கு கோாிக்கை வைத்துள்ளனர்.


Next Story