அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தாிசனம் செய்கின்றனர்.
விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். சமீப நாட்களாக அனைத்து நாட்களிலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகின்றது.
இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று சாமி தாிசனம் செய்தனர்.
மேலும் கோவிலில் பக்தர்களுக்கு இலவசமாக மோர் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story