அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கடந்த சில நாட்களாக அய்யப்ப பக்தர்கள், மேல்மருவத்தூர் பக்தர்களின் வருகையால் அருணாசலேஸ்வரர் கோவிலில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
விடுமுறை நாளையொட்டி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பொது மற்றும் கட்டண தரிசன வழியில் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 1½ மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. மேலும் நேற்று கோவிலில் வெளிநாட்டு பக்தர்கள் பலரும் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story