சிறுத்தை தாக்கி பசு மாடு பலி
பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி பசு மாடு இறந்தது.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகா சேரம்பாடி அருகே நாயக்கன்சோலையில் சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து கால்நடைகளை கடித்து கொன்று வருகிறது. மாலை நேரங்களில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள், மாணவ-மாணவிகளை துரத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று நாயக்கன்சோலையை சேர்ந்த நாகராஜ் என்பவரது பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது புதர் மறைவில் இருந்து வந்த சிறுத்தை பசு மாட்டை தாக்கி கொன்றது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். தகவல் அறிந்த சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த், வனகாப்பாளர் ஆனந்தமூர்த்தி மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சிறுத்தை தாக்கி பசுமாடு இறந்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நாகராஜ் மனு கொடுத்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.