கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு


கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
x
தினத்தந்தி 6 July 2023 12:07 AM IST (Updated: 6 July 2023 12:09 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரமங்கலம் அருகே கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே செட்டித் திருக்கோணம் நடுத்தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 52), விவசாயி. இவர் பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று வீட்டின் பின்பகுதியில் உள்ள கழிவுநீர் தொட்டி மீது பசுமாடு ஒன்று சென்றபோது மூடி உடைந்து 12 அடி ஆழ கழிவுநீர் தொட்டியில் விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் எந்திரம் மூலம் கழிவுநீரை அகற்றி பொக்லைன் எந்திரம் மூலம் பசுமாட்டை கயிறு கட்டி மீட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, பசுமாட்டை உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.


Next Story