கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு


கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
x

கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்கப்பட்டார்.

அரியலூர்

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் அருகே சூனாபுரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவர் கறவை மாடுகள் வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் வளர்த்து வந்த மாடுகளில் ஒரு பசு மாடு நேற்று மதியம் காணாமல் போனதால், அதனை பல இடங்களில் தேடினார். ஆனால் பசு கிடைக்கவில்லை. இந்நிலையில் தில்லைநகர் பகுதியில் ஒரு தரைமட்ட கிணற்றுக்குள் இருந்து மாடு கத்தும் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது சுமார் 20 அடி ஆழ கிணற்றில் பசுமாடு தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடியது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வெங்கடாசலம் பசுமாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால் மீட்க முடியவில்லை. இது குறித்து வெங்கடாசலம் ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அங்கு வந்த நிலைய அலுவலர் தர்மலிங்கம் (பொறுப்பு) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் ஏணி மூலம் இறங்கி, மாட்டின் மீது கயிறு கட்டி, அதனை கிணற்றில் இருந்து மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


Next Story