அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே மோதல்; ஒருவர் காயம்
அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் மாணவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதால் பெற்றோர்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை
மோதல்
அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலையில் பள்ளி திறந்த பின்பு வகுப்பறைக்குள் சென்ற மாணவர்களிடம் ஆசிரியர் பள்ளி சீருடை அணிவது குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவர் ஒருவர் மற்றொரு மாணவரிடம் நீதான் ஆசிரியரிடம் சீருடை குறித்து புகார் தெரிவித்தாய் என கூறி தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது.
மாணவர் காயம்
இதில் மாணவர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தகவல் அறிந்த பெற்றோர்கள், பொதுமக்கள் பள்ளியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்த அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பெற்றோர் ஆசிரியர்கழக நிர்வாகிகள், பள்ளி வளர்ச்சிகுழு நிர்வாகிகள், பள்ளி தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
Related Tags :
Next Story