லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்


லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்
x

லாரி ஏற்றி படுகொலை செய்யப்பட்ட சமூக ஆர்வலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என அரியலூரில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர்

கரூர் அருகே கல்குவாரிக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகநாதன் (வயது 52) லாரி ஏற்றி கொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து அரியலூரில் சமூக ஆர்வலர்களின் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு இளவரசன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்படும் கனிம சுரங்கங்களை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட ஜெகநாதன் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். ஜெகநாதனின் கொலையை கண்டித்து அரியலூர் அண்ணா சிலை அருகே வருகிற 16-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். முன்னதாக ஜெகநாதன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story