கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது
கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை உருக்கமான கடிதம் சிக்கியது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கல்லடி சிதம்பரபுரம் ராஜலிங்கபுரத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 53), எலக்ட்ரீசியன். இவரது மகள் பாப்பா (18). இவர் நெல்லை அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.எஸ்சி. பட்டப்படிப்பில் சேர்ந்தார். இதற்கான கல்லூரி கட்டணத்தை அவரது பெற்றோர் சிரமப்பட்டு செலுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பாப்பா மன வேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் தனியாக இருந்த மாணவி பாப்பா திடீரென துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்வதற்கு முன்பு எழுதிய உருக்கமான கடிதம் போலீசாரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் அவர், தனது படிப்பு செலவுக்காக பெற்றோர்களை சிரமப்படுத்தி விட்டதால் தற்கொலை செய்ய முடிவு எடுத்தேன், என எழுதி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story