ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கும் விழா


ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கும் விழா
x

ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை

மலேசியா பழனிவேல் நினைவு அறக்கட்டளையின் சார்பில், கறம்பக்குடி பகுதியில் ஏழை, எளிய வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு இலவச தையல் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் முதல் பிரிவில் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் இலவச தையல் எந்திரம் வழங்கும் விழா கறம்பக்குடி அருகே உள்ள திருமணஞ்சேரி கோவில் மண்டபத்தில் நடந்தது. விழாவை மாரிமுத்து மாசிலாமணி குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்று பேசினார். விழாவில் புதுக்கோட்டை உதவி கலெக்டர் முருகேசன், அறக்கட்டளை சிறப்பு கவுரவ ஆலோசகர் முன்னாள் மாவட்ட நீதிபதி செல்வகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பயிற்சி முடித்த பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் இலவச தையல் எந்திரங்களை வழங்கி பேசினார்கள். விழாவில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் தவபாஞ்சாலன், சவுதி தமிழ் சங்க செயலாளரும், அறக்கட்டளை கவுரவ ஆலோசகருமான வெங்கடேசன், கறம்பக்குடி தாசில்தார் ராமசாமி, திருமணஞ்சேரி ஊராட்சி மன்ற தலைவர் பிரபு காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அறக்கட்டளை பொருளாளர் நாகராஜன் நன்றி கூறினார்.


Next Story