முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் தொல்லை வழக்கு:விழுப்புரம் கோர்ட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சாட்சியம்மீண்டும் விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் தொல்லை வழக்கு:விழுப்புரம் கோர்ட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சாட்சியம்மீண்டும் விசாரணை 30-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 25 Jan 2023 12:15 AM IST (Updated: 25 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் தொல்லை வழக்கில் விழுப்புரம் கோர்ட்டில் கடலூர் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் சாட்சியம் அளித்தாா்.

விழுப்புரம்


பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கின் புகார்தாரரான பெண் ஐ.பி.எஸ். அதிகாரியிடம் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணையை நிறைவு செய்ததை தொடர்ந்து இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகினார். முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. மேலும் இவ்வழக்கில் நேற்று அரசு தரப்பு சாட்சியான, சி.பி.சி.ஐ.டி. முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டரும் தற்போது கடலூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருமான சுந்தர்ராஜன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் அளித்த சாட்சியம் மற்றும் அவரிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை விவரம் முழுவதையும் நீதிபதி புஷ்பராணி பதிவு செய்துகொண்டார். தொடர்ந்து, இவ்வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.


Next Story