தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் பாய்ந்த கார்


தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் பாய்ந்த கார்
x

விக்கிரமசிங்கபுரம் தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் கார் பாய்ந்தது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் கீழ கொட்டாரம் பகுதியைச் சேர்ந்த இசக்கி மகன் மணிகண்டன் (வயது 24). இவர் சம்பவத்தன்று மாலையில் தனது உறவினரின் காரில் மேல கொட்டாரம் இரும்பு பாலம் அருகில் தாமிரபரணி ஆற்று படித்துறை பகுதியில் குளிக்க சென்றார். அப்போது படித்துறை அருகில் நிறுத்தி இருந்த காரின் ஹேண்ட் பிரேக் திடீரென்று செயலிழந்தது. இதனால் அந்த கார் படித்துறையில் பாய்ந்து நின்றது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


Next Story