காசிமேடு மீன் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம் - களைகட்டிய மீன்பிடி துறைமுகம்


காசிமேடு மீன் சந்தையில் அலைமோதிய மக்கள் கூட்டம் - களைகட்டிய மீன்பிடி துறைமுகம்
x

காசிமேட்டில் மீன் வாங்குவதற்காக அதிகாலை முதலே சுற்றுவட்டாரங்களில் இருந்து பொதுமக்கள் குவிந்தனர்.

சென்னை,

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை ஏராளமான விசைப்படகுகளில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிய நிலையில், பெரிய வகை மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், பாறை உள்ளிட்ட மீன்களின் விலை குறைவாகவே இருந்தது.

இதையடுத்து இன்று அதிகாலை முதலே சுற்றுவட்டாரங்களில் இருந்து பொதுமக்கள் மீன்வாங்குவதற்காக காசிமேட்டில் குவிந்ததால், நீண்ட நாட்களுக்குப் பிறகு காசிமேடு துறைமுகம் பகுதி திருவிழாவைப் போல் களைகட்டியது.

வஞ்சிரம் 900 ரூபாய்க்கும், கொடுவா 600 ரூபாய்க்கும், சீலா, சங்கரா, பாறை உள்ளிட்ட மீன்கள் 500 ரூபாய்க்கும், இறால் 400 ரூபாய்க்கும், நண்டு 300 ரூபாய்க்கும் விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.




Next Story