ஆலங்குளத்தில் காமராஜர் வெண்கல சிலை நிறுவப்பட்டது


ஆலங்குளத்தில் காமராஜர் வெண்கல சிலை நிறுவப்பட்டது
x
தினத்தந்தி 12 July 2023 12:15 AM IST (Updated: 12 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆலங்குளத்தில் காமராஜர் வெண்கல சிலை புதிதாக நிறுவப்பட்டது

தென்காசி

ஆலங்குளம்:

நெல்லை - தென்காசி நெடுஞ்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த பணிக்காக ஆலங்குளம் பஸ் நிலையம் எதிரில் உள்ள காமராஜர் சிலையை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் முடிவு செய்தனர். இதனை அறிந்த ஆலங்குளம் ஊர் பொதுமக்கள் மாற்று இடத்தில் காமராஜர் சிலை நிறுவப்படும் வரை தற்போது இருக்கும் காமராஜர் சிலையை அகற்ற கூடாது என்று கோரிக்கை வைத்து மாற்று இடத்தில் காமராஜர் சிலை அமைப்பதற்கான வேலை மும்முரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் 9¼ அடி உயரமும் 630 கிலோ எடையும் கொண்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான புதிய வெண்கல காமராஜர் சிலையை கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மற்றும் அவரது தாயார் தமிழ்ச்செல்வி வசந்தகுமார் ஆகியோர் ஊர் பொதுமக்களுக்கு அன்பளிப்பாக வழங்கினர்.

மேலும் ஊர் பொதுமக்கள் சார்பாக ஆலங்குளம் காமராஜர் சிலை பராமரிப்பு மற்றும் அமைப்பு குழுவினர் நேற்று காலை புதியதாக கட்டுமான பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தில் வெண்கல காமராஜர் சிலையினை நிறுவினர். தொடர்ந்து ஆலங்குளம் யூனியன் தலைவர் திவ்யா, தொழிலதிபர் மணிகண்டன் தம்பதியினர் காமராஜர் சிலை கட்டிட கட்டுமான பணிக்காக ரூ.1 லட்சம் நிதியினை தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் முன்னிலையில் காமராஜர் சிலை அமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் ஜான்ரவி, காமராஜ் ஆகியோரிடம் வழங்கினர். நிகழ்ச்சியில் ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகுல் ஹமீது, சப்-இன்ஸ்கெ்டர் சின்னத்துரை, பேரூராட்சி கவுன்சிலர்கள், ஆலங்குளம் தொழிலதிபர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story