கீழ்வேளூர் அருகே உடைந்த குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது


கீழ்வேளூர் அருகே உடைந்த குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது
x

கீழ்வேளூர் அருகே உடைந்த குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது

நாகப்பட்டினம்

'தினத்தந்தி' செய்தி எதிெராலியாக கீழ்வேளூர் அருகே உடைந்த குடிநீர் குழாய் சரிசெய்யப்பட்டது.

குடிநீர் குழாய் உடைப்பு

திருவாரூர் மாவட்டம் ஓடாச்சேரி ஊராட்சியில் இருந்து குருக்கத்தி நீரேற்றும் நிலையம் மூலம் கீழ்வேளூர், ஆழியூர், சங்கமங்கலம், செல்லூர் வழியாக இரும்பு குழாய் மூலம் நாகப்பட்டினம் புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள குடிநீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது.

நாகை- திருவாரூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆழியூர் பிரிவு சாலை வளைவில் சங்கமங்கலம் வாய்க்கால் செல்கிறது. சில மாதங்களாக அந்த பகுதியில் செல்லும் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட வால்வு பகுதி உடைந்து, குடிநீர் வீணாகி வாய்க்காலுக்கு சென்றது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருந்தது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாய்யை சரிசெய்து தண்ணீர் வீணாகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி படத்துடன் தினத்தந்தி நாளிதழில் பிரசுரிக்கப்பட்டது.

பொதுமக்கள் நன்றி

இதன் எதிெராலியாக நாகை நகராட்சி ஊழியர்கள் உடைந்த நிலையில் காணப்பட்ட குடிநீர் குழாயில் பொருத்தப்பட்ட வால்வு பகுதியை சரி செய்தனர். இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை மேற்கொண்ட நகராட்சி நிர்வாகத்திற்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story