ஊருக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு


ஊருக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டை அருகே நேற்று ஊருக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை அருகே நேற்று ஊருக்குள் கரடி புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கரடி புகுந்தது

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்களில் அவ்வப்போது வனவிலங்குகள் புகுந்து விவசாயிகள், பொதுமக்களை அச்சுறுத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது.

குறிப்பாக மலைப்பகுதியில் இருந்து அவ்வப்போது யானை கூட்டங்கள் கீழே இறங்கி விவசாய பயிர்களை சேதப்படுத்தி வந்த நிலையில், நேற்று செங்கோட்டை அருகே உள்ள தேன்பொத்தை ராஜபுரம் காலனிக்குள் கரடி புகுந்தது.

இதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் மேக்கரை வனச்சரக உதவி அலுவலர் அம்பலவாணன் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தற்போது ராஜபுரம் காலனியில் முகாமிட்டுள்ளனர்.

பொதுமக்கள் அச்சம்

கரடியின் காலடித்தடங்களை வைத்து கரடி தற்போது எங்கே சென்றுள்ளது? என்பது குறித்து வனத்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கரடியை காட்டுக்குள் விரட்டும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

ஊருக்குள் புகுந்த கரடி காட்டுக்குள் சென்று விட்டதா? அல்லது ஊருக்குள் பதுங்கி உள்ளதா? என தெரியாமல் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இச்சம்பவம் செங்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story