கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி


பெரம்பலூர் மாவட்ட அளவில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் கல்லூரி மாணவிகளுக்கு கூடைப்பந்தும், மாணவர்களுக்கு கிரிக்கெட் போட்டியும் நடந்தது.

பெரம்பலூர்

16 அணிகள்

பெரம்பலூர் மாவட்ட அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் எம்.ஜி.ஆர். விளையாட்டரங்கத்தில் கடந்த 8-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று கல்லூரி மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டியும், மாணவா்களுக்கான கிரிக்கெட் போட்டியும் நடந்தது.

கூடைப்பந்து போட்டியில் 6 அணிகளும், கிரிக்கெட் போட்டியில் 10 அணிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர். குழு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு தலா ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக தலா ரூ.2 ஆயிரமும், 3-ம் பரிசாக தலா ரூ.ஆயிரமும் பரிசுத்தொகையாக, அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது.

22-ந்தேதி நீச்சல் போட்டிகள்

மாவட்ட அளவிலான குழு போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்கள் வருகிற மே மாதத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் அரசு செலவில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதே விளையாட்டு அரங்கத்தில் வருகிற 22-ந்தேதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கான நீச்சல் போட்டிகளும், கால்பந்து போட்டிகளும் தனித்தனியாக நடைபெறவுள்ளது.

23, 25-ந்தேதிகளில் பொதுப்பிரிவினருக்கும், 27-ந்தேதி அரசு ஊழியர்களுக்கும், 28-ந்தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடக்கிறது. மேலும் 28-ந்தேதி பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு டேபிள் டென்னிஸ் போட்டிகள் தனித்தனியாகவும், மாணவிகளுக்கு வளைகோல் பந்து போட்டிகளும் நடைபெறுகிறது.


Next Story