மாவட்டத்தில் 92 சதவீதம் பேர் தேர்ச்சி
When the Plus-2 exam results were released, 92 percent passed in Cuddalore district.
கடலூர்
92 சதவீதம் பேர் தேர்ச்சி
தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ந் தேதி வரை நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் இந்த தேர்வை 117 அரசு பள்ளிகள், 30 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 98 மெட்ரிக், தனியார் பள்ளிகள் என மொத்தம் 245 பள்ளிகளில் இருந்து 14 ஆயிரத்து 960 மாணவர்கள், 15 ஆயிரத்து 310 மாணவிகள் என 30 ஆயிரத்து 270 மாணவ, மாணவிகள் எழுதினர்.
இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியானது. கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதியவர்களில் 13 ஆயிரத்து 247 மாணவர்கள், 14 ஆயிரத்து 612 மாணவிகள் என மொத்தம் 27 ஆயிரத்து 859 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் 92.04 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 88.55 சதவீதமும், மாணவிகள் 95.44 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
27-வது இடம்
இது தவிர அரசு பள்ளிகள் 87.87 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டு நடந்த பிளஸ்-2 தேர்வில் 92.82 சதவீதம் பெற்றிருந்த நிலையில், தற்போது 92.04 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 27-வது இடத்தை பிடித்து பின்தங்கி உள்ளது. கடந்த ஆண்டு 22-வது இடத்தை பிடித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.