பூண்டி ஏரியில் மதகுகள் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு


பூண்டி ஏரியில் மதகுகள் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு
x

பூண்டி ஏரியில் மதகுகள் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி. இந்த ஏரியின் உயரம் 35 அடி ஆகும். இதில் 3.231 டி.எம்.சி. தண்ணீரை சேமித்து வைக்கலாம். இந்த ஏரியின் அருகே நீரியல் ஆய்வுகூடம் உள்ளது. பூண்டி ஏரியில் தேங்கும் தண்ணீர் அங்குள்ள மதகு கிணறு வழியாக நீரியல் ஆய்வு கூடத்துக்கு செல்வது வழக்கம். கடந்த வருடம் ஜனவரி மாதத்தில் பெய்த கனமழைக்கு பூண்டி ஏரி முழுவதுமாக நிரம்பியது. அப்போது தண்ணீரின் அழுத்தத்தால் ஏரியின் மதகு கிணறு சேதமடைந்து நீரியல் ஆய்வுக்கூடத்தில் வெள்ளம் பாய்ந்தது.

இந்த நிலையில் சேதமடைந்த மதகு கிணற்றை அகற்றி ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிதாக 2 மதகு கிணறுகள் அமைக்கும் பணிகள் ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. தற்போது இந்த பணி 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 10 சதவீத பணிகளை 15 நாட்களுக்குள் முடிக்கப்படும் என்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி கண்டலேறு அணையிலிருந்து பூண்டி எரிக்கு தண்ணீர் பெற திட்டமிட்டுள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story