தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x
தினத்தந்தி 2 Oct 2023 12:28 PM IST (Updated: 2 Oct 2023 2:12 PM IST)
t-max-icont-min-icon

தமிழக விஞ்ஞானிகள் 9 பேருக்கும் தலா ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

இஸ்ரோவில் சாதனை படைத்த தமிழ்நாட்டு விஞ்ஞானிகளுக்கு 'ஒளிரும் தமிழ்நாடு, மிளிரும் தமிழர்கள் என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன், மயில்சாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல், உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

நிலவை தொட்ட 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. சந்திரயான்-3 திட்டம் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் பற்றிய செய்தி கொடிகட்டி பறந்தது. இந்தியாவின் பக்கம் உலகத்தையே பார்க்க வைத்த விஞ்ஞானிகள் இங்கு அமர்ந்திருக்கின்றனர்.

வீரமுத்துவேல் உள்ளிட்ட தமிழர்கள் இஸ்ரோவில் கொடிகட்டி பறப்பது தமிழகத்திற்கு பெருமை. தமிழ்நாட்டு விஞ்ஞானிகள் 9 பேரில் 6 பேர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள். தமிழர்களின் வானியல் அறிவு தனித்துவமானது. விருப்பு, வெறுப்பற்ற வகையில் அறிவியலை பின்பற்றுபவர்கள் தமிழர்கள்.

தமிழ்நாட்டுக்கும் தேசத்திற்கும் பெருமை சேர்த்த விஞ்ஞானிகள் 9 பேருக்கு தலா ரூ.25 லட்சம் பரிசாக வழங்கப்படும். 7.5 சதவீத ஒதுக்கீட்டில் பொறியியல் படிக்கும் 9 மாணவர்களுக்கு சாதனை விஞ்ஞானி என்ற பெயரில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி தொகுப்பு நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.



Next Story