திருமங்கலம் அருகே வீடுகளில் 9 பவுன் நகை-பணம் கொள்ளை


திருமங்கலம் அருகே வீடுகளில் 9 பவுன் நகை-பணம் கொள்ளை
x

திருமங்கலம் அருகே 2 வீடுகளில் 9 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே 2 வீடுகளில் 9 பவுன் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நகை-பணம்

திருமங்கலம் அருகே செங்கப்படை கிராமத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி(வயது 67). ஊர் காவலராக இருந்து வருகிறார். இவருடைய மனைவி பத்மாவதி. இவர்களுக்கு குருசாமி, மனோகரன் என்ற மகன்களுடன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். குருசாமி ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். மனோகரன் கோவில்பட்டியில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலராக பணியாற்றி வருகிறார். மகள் அருகில் வசித்து வருகிறார்.

தனுஷ்கோடி மற்றும் அவருடைய மனைவி இருவரும் தோட்டத்தில் உள்ள வீட்டில் படுத்து தூங்கிவிட்டு காலையில் வீட்டிற்கு வருவது வழக்கம். இந்நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டினுள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4½ பவுன் நகை, ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் கொள்ளையடிக்கபட்டது தெரியவந்தது. சம்பவம் குறித்து திருமங்கலம் தாலுகா போலீசருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் திருமங்கலம் தாலுகா போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

மற்றொரு சம்பவம்

திருமங்கலம் அருகே கூடக்கோவில் சரகம் மேலஉப்பிலிகுண்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவருடைய மனைவி இருளாகி. இவர்கள் வீட்டின் பீரோவை பார்த்த போது அதில் இருந்த 4½ பவுன் நகை, ரூ.10 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து கூடக்கோவில் போலீஸ் நிலையத்தில் இருளாகி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம் நகர் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்கள் தற்போது கிராமப்புறங்களில் படையெடுத்து வருகின்றனர். ஆதலால் போலீசார் கிராமப்புறங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story