பெண்களிடம் 9 பவுன் தங்க சங்கிலிகள் பறிப்பு
பெண்களிடம் 9 பவுன் தங்க சங்கிலிகள் பறிக்கப்பட்டது.
புதுக்கோட்டை
அரிமளம்:
அரிமளம் ஒன்றியம், ராயவரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேரோட்டத்தில் திருமயம் அருகே உள்ள தேத்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனிமுத்து (வயது 59) என்பவர் சாமி கும்பிட சென்றுள்ளார். தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலி, கே.கோட்டையூர் பகுதியை சேர்ந்த பொன்னம்மாள் (60) என்பவர் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலி, கானப்பூர் கிராமத்தை சேர்ந்த மீனாள் (40) என்பவர் கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலி மற்றும் சில பெண்களிடம் தேரோட்ட கூட்டத்தை பயன்படுத்தி தங்க சங்கிலிகளை மர்மநபர்கள் பறித்து சென்றுள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், அரிமளம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story