சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது
மயிலாடுதுறை மாவட்டத்தி்ல் சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
மயிலாடுதுறை;
மயிலாடுதுறை மாவட்டத்தி்ல் சாராயம் விற்ற கணவன்- மனைவி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
சாராய விற்பனை
மயிலாடுதுறை அருகே அன்பனாதபுரம் கிராமத்தில் சாராய விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது அங்கு சாராய விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் ராஜதயாளனை(வயது 36) போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 170 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.மயிலாடுதுறை திருவிழந்தூர் தீப்பாய்ந்தாள் அம்மன் கோவில் அருகில் சாராய விற்பனையில் ஈடுபட்ட பொட்டவெளியைச் சேர்ந்த நீலமேகம் மகன் விஜய் (25), சீனிவாசபுரம் முல்லைத்தெருவை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் கிட்டப்பா பாலம் அருகில் சாராய விற்பனையில் ஈடுபட்ட மாப்படுகை கிராமத்தை சேர்ந்த பாலு மகன் அருளையும் (23) போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடம் இருந்தும் மொத்தம் 500 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணல்மேடு
மணல்மேடு பகுதியில் பல்வேறு இடங்களில் சாராயம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் மணல்மேடு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மணல்மேட்டில் சாராயம் விற்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ராதாநல்லூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது45), அவரது மனைவி ராணி (45) என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜசேகர், ராணி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.இதைப்போல கடலங்குடி பகுதியில் சாராயம் விற்ற கடலங்குடி தோப்புத் தெருவை சேர்ந்த பக்கிரிசாமி மனைவி அஞ்சம்மாள்(48), கடலங்குடி மெயின்ரோடு பகுதியை சேர்ந்த மனோகர் மகன் மனோபாலா (24), குறிச்சி பகுதியில் சாராயம் விற்ற குறிச்சி மேலத்தெருவை சேர்ந்த அன்புரோஸ் (47) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.