வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் பிப்ரவரி 29-ந்தேதி 9 குழந்தைகள் பிறந்தன
பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும் ஆண்டை லீப் ஆண்டு என்கின்றனர்.
அடுக்கம்பாறை,
பூமி சூரியனை ஒரு சுற்று சுற்றிவர 365¼ நாட்கள் ஆகின்றன. இந்த கால் நாளை கணக்கிடாமல், ஆண்டுக்கு 365 நாட்கள் என்றே அறிவியல் அறிஞர்கள் கணக்கிடுகின்றனர். எனவே, பிப்ரவரி மாதத்தில் 28 நாட்கள் மட்டுமே வருகிறது.மீதமுள்ள கால் நாட்களைச் சேர்ந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு நாளாக கணக்கிடும்போது, பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும்.இதுபோல, பிப்ரவரி மாதத்தில் 29 நாட்கள் வரும் ஆண்டை லீப் ஆண்டு என்கின்றனர்.அதன்படி, 2024 மற்றும் 2028 என்று அடுத்தடுத்த 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் லீப் ஆண்டு வரும். எனவே, லீப் ஆண்டான நேற்று பிப்ரவரி 29-ந் தேதி பிறந்தவர்கள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் பிறந்த நாள் கொண்டாட முடியும்.முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் லீப் ஆண்டில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிப்ரவரி 29-ந் தேதியான நேற்று 7 ஆண், 2 பெண் குழந்தைகள் என மொத்தம் 9 குழந்தைகள் பிறந்துள்ளன.இக்குழந்தைகள் 2028-ம் ஆண்டு தான் அடுத்த பிறந்த நாளைக் கொண்டாட முடியும்.