89-வது பிறந்தநாள்: பா.ராமச்சந்திர ஆதித்தனார் உருவப்படத்துக்கு தலைவர்கள் மரியாதை
‘மாலை முரசு' அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 89-வது பிறந்தநாளையொட்டி அவருடைய உருவப்படத்துக்கு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
சென்னை,
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் மூத்த மகனும், 'மாலை முரசு' அதிபருமான பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் 89-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை அண்ணா சாலை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள 'மாலை முரசு' அலுவலகத்தில் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு, அவருடைய மகனும், 'மாலை முரசு' நிர்வாக இயக்குனருமான இரா.கண்ணன் ஆதித்தன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, 'மாலை முரசு' நாளிதழ் மற்றும் 'மாலை முரசு' தொலைக்காட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மரியாதை செலுத்தினார்கள்.
தமிழிசை சவுந்தரராஜன்
பா.ராமச்சந்திர ஆதித்தனார் உருவப்படத்துக்கு தெலுங்கானா கவர்னரும், புதுச்சேரி துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை, அவருடைய கணவர் டாக்டர் சவுந்தரராஜன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தி.மு.க.-அ.தி.மு.க.
தொடர்ந்து, தி.மு.க. சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முன்னாள் எம்.எல். ஏ.வக்கீல் இன்பதுரை உள்பட நிர்வாகிகளும், பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி தலைமையில் நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர்.
பா.ஜ.க.-காங்கிரஸ்
தமிழக பா.ஜ.க. சார்பில் மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் விஜய் ஆனந்த் உள்பட நிர்வாகிகளும், தமிழக காங்கிரஸ் சார்பில் மாநில பொதுச்செயலாளர் டி.எம்.தணிகாசலம், வர்த்தக அணி செயல் தலைவர் எம்.ஜி.ராம்சாமி.
நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நிர்வாகிகள், அ.ம.மு.க. சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன், கொள்கை பரப்பு செயலாளர் சி.ஆர்.சரஸ்வதி உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
த.மா.கா.-மக்கள் நீதி மய்யம்
த.மா.கா. தலைமை நிலைய செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், வர்த்தகர் அணி தலைவர் ஆர்.எஸ்.முத்து, மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சி யின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், செய்தித்தொடர்பாளர் முரளி அப்பாஸ், சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன், பொருளாளர் கண்ணன், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் இளைஞர் அணி தலைவர் என்.ஆர்.டி.பிரேம்குமார், மாநில செயலாளர் எம்.வி.எம்.ரமேஷ்குமார், புதிய நீதிக்கட்சி மாநில அமைப்பு செயலாளர் எஸ்.பழனி உள்பட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
நாடார் சங்கங்கள்
நெல்லை தட்சணமாற நாடார் சங்கத்தின் தலைவர் ஆர்.கே.காளிதாஸ், செயலாளர் ராஜ்குமார் உள்பட நிர்வாகிகளும், இந்திய நாடார்கள் சங்க பேரமைப்பின் தலைவர் ராகம் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சிவக்குமார், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், அடையாறு நாடார் சங்கத்தின் தலைவர் ராமச்சந்திரன்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, கூடுதல் செயலாளர் வி.பி.மணி உள்பட நிர்வாகிகள், தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்கத்தின் நிறுவன தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால், மாநில தலைவர் மாரித்தங்கம், பழைய கார் விற்பனையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.சிவக்குமார் மரியாதை செலுத்தினர்.
தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.அருண்குமார், சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர் பா.சுரேஷ், காந்தி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.பி.எஸ்.கார்த்திக், தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், ம.பொ.சி. பேரன் செந்தில் ம.பொ.சி. மரியாதை செலுத்தினர்.
எஸ்.வி.சேகர்
திரை உலகம் சார்பில் பழம்பெரும் நடிகை லதா, நடிகர் எஸ்.வி.சேகர், இசையமைப்பாளர் தீனா, தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் கடையம் ராஜூ, சின்னத்திரை நடிகர் அரவிந்த் ரியோ, நடிகை கும்தாஜ், டாக்டர்கள் வாணியம்பாடி அக்பர் கவுசர், தமூம், ஆயிஷா உள்பட ஏராளமானோர் பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழியில் உள்ள பா.ராமச்சந்திர ஆதித்தனாரின் சிலைக்கு, தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் டி.விஜயகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.