8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


8 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x

பள்ளிகொண்டா அருகே 8 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தி செல்வது அதிகளவில் நடந்த வருகிறது. இந்த நிலையில் பள்ளிகொண்டா பகுதியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கலெக்டர் குமாரவேல் பாண்டியனுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் பறக்கும் படை தனி தாசில்தார் கோடீஸ்வரன், அணைக்கட்டு வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் பள்ளிகொண்டா அருகே கொல்லமங்கலம் நான்கு வழிச்சாலையில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தனியாக நின்று கொண்டு இருந்த லாரியை சோதனை செய்தனர். சோதனையில் 8 டன் ரேஷன் அரிசி இருந்ததை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் ரேஷன் அரிசியை வேலூர் உணவுப்பொருள் வாணிபக் கிடங்கிலும் லாரியை உணவுப் பொருள் பாதுகாப்பு புலனாய்வு ஆய்வாளிடம் ஒப்படைத்தனர்.


Next Story