பெண்ணிடம் 8 பவுன் தங்க நகைகள் திருட்டு


பெண்ணிடம் 8 பவுன் தங்க நகைகள் திருட்டு
x

திருமணத்திற்காக மும்பையில் இருந்து வந்த பெண்ணிடம் 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை

கீரனூர்:

திருமண நிகழ்ச்சி

புதுக்கோட்டை மாவட்டம், வத்தனாக்கோட்டையை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மலர்கொடி (வயது 58). இவர் மும்பையில் வசித்து வருகிறார். இந்நிலையில் கீரனூர் அருகே வத்தனாக்கோட்டையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் மும்பையில் இருந்து ரெயில் மூலம் திருச்சி வந்தார். அப்போது அவர் திருமணத்திற்கு அணிவதற்காக ஒரு பையில் 8 பவுன் தங்க நகைகளை வைத்திருந்தார்.

8 பவுன் நகைகள் திருட்டு

பின்னர் திருச்சி வந்த மலர்கொடி, திருச்சியில் உள்ள அவரது அண்ணன் வீட்டில் தங்கியிருந்தார். இன்று அங்கிருந்து கிளம்பும்போது பையில் நகைகள் இருந்துள்ளது. பின்னர் கீரனூரிலிருந்து வத்தனாக்கோட்டைக்கு டவுன் பஸ்சில் சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பையில், இருந்த 8 பவுன் தங்க நகைகளை பஸ்சில் வரும் போது மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உடையாளிப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் வழக்குப்பதிவு செய்து 8 பவுன் தங்க நகைகளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story