புஞ்சைபுளியம்பட்டியில் வெறிநாய் கடித்து 8 பேர் காயம்


புஞ்சைபுளியம்பட்டியில் வெறிநாய் கடித்து 8 பேர் காயம்
x

புஞ்சைபுளியம்பட்டியில் வெறிநாய் கடித்து 8 பேர் காயம்

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி டானாபுதூர் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று ரோட்டில் நடந்து சென்ற பொன்னுச்சாமி (வயது 50), பிரியா (18) பிலோமினா (65), அய்யாவு (75) உள்ளிட்ட 8 பேரை துரத்தி, துரத்தி கடித்து குதறியது. காயம் அடைந்த 8 பேரும் புஞ்சைபுளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின்னர் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர்.

புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் தெருவில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இதில் சில நாய்கள் வெறிபிடித்து நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. எனவே நகராட்சி அதிகாரிகள் ரோட்டில் திரியும் நாய்களை பிடித்துச்செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story