நல்லாசிரியர் விருதுக்கு 8 பேர் தேர்வு


நல்லாசிரியர் விருதுக்கு 8 பேர் தேர்வு
x

நல்லாசிரியர் விருதுக்கு 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர்

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில், சிறந்த கல்வித் தொண்டாற்றும் நல்லாசிரியர்களுக்கு "டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது" வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கு அரியலூர் மாவட்டத்தில் நல்லாசிரியர் விருதுக்கு 8 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் விவரம் வருமாறு:-

உடையார்பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கர், சிறுவளூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை, வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செபாஸ்டியன், வானவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை அமுதா, கயர்லாபாத் கே.ஆர்.வி. நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தரராஜன், தெற்குப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ஜெயலெட்சுமி, ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை உர்சலா சமந்தா மற்றும் கீழப்பழுவூரில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் மணமலர்ச்செல்வி ஆகிய 8 பேர் நல்லாசிரியர் விருதுக்கு தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நாளை (திங்கட்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கில் வைத்து தமிழக அரசால் விருது வழங்கப்படவுள்ளது.


Next Story