திருக்கோவிலூரில் இன்று முதல் கூடுதலாக 8 ரெயில்கள் நின்று செல்லும்
திருக்கோவிலூரில் இன்றுமுதல்(திங்கட்கிழமை) கூடுதலாக 8 ரெயில்கள் நின்று செல்லும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் ரெயில் நிலையம்
கள்ளக்குறிச்சி் மாவட்டம் அரகண்டநல்லூரில் திருக்கோவிலூர் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தில் விழுப்புரம்-திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் காலை 6 மணிக்கும், விழுப்புரம்-திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் மாலை 5.56 மணிக்கும், விழுப்புரம்-காட்பாடி செல்லும் பயணிகள் ரெயில் தினமும் இரவு 7:43 மணிக்கும், புதுச்சேரி-தாதர் செல்லும் சாலுக்கியா எக்ஸ்பிரஸ் ரெயில் (ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமை மட்டும்) இரவு 10:45 மணிக்கும் என மொத்தமாக 4 ரெயில்கள் நின்று செல்வது வழக்கம்.
கூடுதலாக 8 ரெயில்கள்
இந்த நிலையில் இன்று முதல் (திங்கட் கிழமை) கூடுதலாக 8 ரெயில்கள் திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மன்னார்குடி-திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் (திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமை மட்டும்) காலை 10.30 மணிக்கும், விழுப்புரம்-புருலியா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (புதன் மற்றும் சனிக்கிழமை மட்டும்) மதியம் 12:44 மணிக்கும், தாதர்-புதுச்சேரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமை மட்டும்) காலை 4.50 மணிக்கும், காட்பாடி-விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் தினமும் காலை 8 மணிக்கும், திருப்பதி-விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் தினமும் காலை 9.29 மணிக்கும், திருப்பதி-விழுப்புரம் எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் இரவு 7:10 மணிக்கும், திருப்பதி-மன்னார்குடி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும்) மாலை 4.28 மணிக்கும், புருலியா-விழுப்புரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மட்டும்) மாலை 5:40 மணிக்கும் திருக்கோவிலூர் ரெயில் நிைலயத்தில் இன்று முதல் நின்று செல்லும். இவ்வாறு அதிகாரி ஒருவர் ெதரிவித்தார்.