தனுஷ்கோடிக்கு மேலும் 8 பேர் அகதிகளாக வருகை


தனுஷ்கோடிக்கு மேலும் 8 பேர் அகதிகளாக வருகை
x
தினத்தந்தி 16 July 2023 12:15 AM IST (Updated: 16 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

இலங்கையில் இருந்து 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு தப்பி வந்தனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து 2 குடும்பங்களை சேர்ந்த 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு தப்பி வந்தனர்.

8 அகதிகள் வருகை

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பின்பு, இதுவரை தமிழகத்திற்கு 250-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.

இந்தநிலையில், இலங்ைகயில் இருந்து மேலும் சிலர் அகதிகளாக வந்திருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, ராமேசுவரம் கடலோர போலீசார் தனுஷ்கோடி கடற்கரைக்கு விரைந்தனர்.

அங்கு 2 குடும்பங்களைச் சேர்ந்த 8 அகதிகளை காவல்துறை வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்களிடம் மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

ரூ.3 லட்சம் கொடுத்தோம்

விசாரணையில் யாழ்ப்பாணம் குளவாடி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (வயது 45), அவருடைய மனைவி தர்ஷிகா (37), இவர்களுடைய குழந்தைகள் அஸ்னத் (15) யோகாஸ் (11), யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் மரியா, இவருடைய மகன்கள் அபிலாஷ், அவினாஷ், ஜெகிஸ்தான் என தெரியவந்தது.

இலங்கையில் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்து இருப்பதாகவும், இன்னும் விலைவாசி கட்டுக்குள் வராததால் அங்கிருந்து தமிழகம் வந்ததாகவும், தங்களை அழைத்துவர படகோட்டிக்கு கொடுப்பதற்கு பணம் இல்லாததால் வீடுகளில் உள்ள பொருட்களை விற்று படகோட்டிக்கு ரூ.3 லட்சம் கொடுத்து தப்பி வந்ததாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். பின்னர் 8 பேரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story