8 கிலோ காட்டுப்பன்றி இறைச்சி பறிமுதல்
பழனி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய வாலிபருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்
தீபாவளியையொட்டி வனவிலங்கு வேட்டையாடுவதை தடுக்க, பழனி வனச்சரகர் பழனிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பழனி அருகே ஓடைக்காடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பழனியை அடுத்த அழகாபுரியை சேர்ந்த வீரன்வல்லரசு (வயது 21) என்பதும், காட்டுப்பன்றியை வேட்டையாடி அதன் மூலம் கிடைத்த 8 கிலோ இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இறைச்சியை பறிமுதல் செய்த வனத்துறையினர், வீரன்வல்லரசு மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
Related Tags :
Next Story