தென்னம்பாளையம் மார்க்கெட்டில் 7 டன் பீர்க்கங்காய் விற்பனை


தென்னம்பாளையம் மார்க்கெட்டில் 7 டன் பீர்க்கங்காய் விற்பனை
x
தினத்தந்தி 16 July 2023 10:26 PM IST (Updated: 17 July 2023 3:58 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் நேற்று பீர்க்கங்காய் வரத்து அதிகமாக இருந்தது. ஒரே நாளில் சுமார் 7 டன் பீர்க்கங்காய் விற்று தீர்ந்தது.

திருப்பூர்

7 டன் பீர்க்கங்காய்

திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டிற்கு திருப்பூர், பல்லடம், பொங்கலூர், சேவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலுருந்தும் உள்ளூர் காய்கறிகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. நேற்று பீர்க்கங்காய் வரத்து அதிகம் இருந்தது. 15 கிலோ எடை கொண்ட பீர்க்கங்காய் கட்டு மொத்த விற்பனை விலையாக ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு கட்டு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று விலை சற்று அதிகம் இருந்ததால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். ஒரே நாளில் சுமார் 7 டன் பீர்க்கங்காய் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் 15 கிலோ எடை கொண்ட புடலங்காய் அளவிற்கு தகுந்தவாறு ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்பட்டது.

வியாபாரிகள் ஆர்வம்

இதேபோல் 15 கிலோ எடை கொண்ட சுரைக்காய் பை ரூ. 300 முதல் ரூ.350-க்கும், 30 கிலோ எடை கொண்ட பாகற்காய் மூட்டை ரூ.1300 முதல் ரூ.1400 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. 30 கிலோ எடை கொண்ட பீட்ரூட் ரூ.500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு சில காய்கறிகள் கடந்த வாரத்தை விட குறைவான விலையில் விற்பனை செய்யப்பட்டதால் வியாபாரிகள் கடைகளுக்கு ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கி சென்றனர். மொத்த வியாபாரத்தில் காய்கறிகளின் விற்பனை விலை ேமற்கண்டவாறு இருந்த நிலையில், சில்லரை வியாபாரத்தில் இவற்றின் விலை சற்று அதிகமாக இருந்தது.


Next Story