75 மரக்கன்றுகள் நடும் விழா
சுதந்திர தினத்தை முன்னிட்டு கீழக்கடையத்தில் 75 மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
தென்காசி
கடையம்:
கடையம் யூனியன் கீழக்கடையம் ஊராட்சி மன்றம் சார்பில் வாசுகிரி மலைப்பகுதியில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. கீழக்கடையம் ஊராட்சி மன்ற தலைவர் பூமிநாத் தலைமை தாங்கினார். கடையம் ஆணையாளர் ராஜசேகர், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலை முருகன், கடையம் யூனியன் பஞ்சாயத்து தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் டிகே பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடையம் யூனியன் தலைவர் செல்லம்மாள் முருகன் மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆதர்ஷ் மெட்ரிகுலேஷன் பள்ளியின் தலைமை ஆசிரியை மாரிசெல்வி, உதவி தலைமை ஆசிரியை மேரி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முகைதீன் பாத்திமா, பணிதள பொறுப்பாளர் பொன் பாண்டி, ஊராட்சி செயலாளர் ஜெய சக்திவேல் மற்றும் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story