735 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
குளச்சலில் 735 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
கன்னியாகுமரி
குளச்சல்,
குளச்சல் கடலோர காவல்படை குழும போலீஸ் நிலைய நுண்ணறிவு பிரிவு ஏட்டுக்கள் சிந்துகுமார், சிவகுமார், ஜஸ்டின் மற்றும் போலீசார் குளச்சல் துறைமுக பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் 21 கேன்களில் 735 லிட்டர் மீனவர்களுக்கான மானியவிலை மண்எண்ணெய் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. விசாரணையில் இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து மண்எண்ணெய்யை வேனுடன் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட மண்எண்ணெய், வேன் ஆகியவற்றுடன் வேன் டிரைவர் காட்டத்துறையை சேர்ந்த சுஜின் (வயது36), சாமியார்மடத்தை சேர்ந்த கிரிபிரசாத் (38) ஆகியோரை பிடித்து கல்குளம் வட்ட வழங்கல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story