காரையூரில் 72 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது


காரையூரில் 72 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்; 2 பேர் கைது
x

காரையூரில் 72 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை

காரையூர் பகுதியில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் உள்ள கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காரையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னையா (வயது 53), முருகப்பன் (50) ஆகியோரது கடைகளில் சோதனை நடத்தியபோது 72 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story