கரும்பாட்டூரில் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கரும்பாட்டூரில் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாகா்கோவில்:
கரும்பாட்டூரில் 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
நாகர்கோவில் அருகே கரும்பாட்டூரில் ரேஷன் அரிசி மூடைகள் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக ரகசிய தகவல்கள் வெளியாகின. இதை தொடர்ந்து அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி ஜெகதா தலைமையில் தனி வருவாய் ஆய்வாளா்கள் கவுதம் பெருமாள், மணி ஆகியோர் நேற்று கரும்பாட்டூர் சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு வீட்டின் அருகே மறைவான இடத்தில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதைத் தொடர்ந்து அதிகாரிகள் உடனே அந்த அரிசி மூடைகளை பறிமுதல் செய்தனர். ஆனால் அரிசி மூடைகளை பதுக்கி வைத்திருந்த மர்ம நபர்கள் யார்? என்பது பற்றி தெரியவில்லை. இதுதொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மூடைகள் சுமார் 700 கிலோ இருந்தது. பின்னர் அந்த மூடைகள் கோணத்தில் உள்ள குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.