விழுப்புரத்தில் ரெயிலில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்


விழுப்புரத்தில் ரெயிலில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 20 July 2023 6:45 PM GMT (Updated: 20 July 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் ரெயிலில் கடத்த முயன்ற 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம்

விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துசெல்வம், அசோகன், போலீசார் வீரபாலன், ரங்கபாஷியம் ஆகியோர் நேற்று பகல் 12 மணியளவில் விழுப்புரம் ரெயில்வே நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயில் நிலைய 1-வது நடைமேடையின் கடைசிப்பகுதியில் 60 சாக்கு மூட்டைகள் இருந்தது. அதை பிரித்து பார்த்ததில் 700 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வருவதை பார்த்ததும் அதை கடத்த முயன்றவர்கள் நைசாக தப்பிச்சென்று விட்டனர்.

விசாரணையில், இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை விழுப்புரம் பகுதியில் உள்ள பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு வாங்கி அதனை ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு ரெயில் மூலம் கடத்த முயன்றது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து அவற்றை விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த ரேஷன் அரிசியை கடத்த முயன்றவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story