புளியரையில் 700 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின


புளியரையில் 700 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின
x
தினத்தந்தி 3 Aug 2023 12:30 AM IST (Updated: 3 Aug 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

பருவமழை பொய்த்ததால் புளியரையில் 700 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

தென்காசி

செங்கோட்டை:

பருவமழை பொய்த்ததால் புளியரையில் 700 ஏக்கர் நெற்பயிர்கள் கருகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

நெற்பயிர்கள்

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே புளியரை பகுதியில் ஏராளமான விவசாயிகள் சுமார் 700 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிட்டனர். நெற்பயிர்கள் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில், கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை போதியளவு பெய்யாததால் பயிர்கள் தண்ணீரின்றி கருக தொடங்கின.

இதனால் பல ஆயிரம் செலவு செய்து பயிரிட்ட விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

கால்நடை மேய்ச்சல் நிலமாக...

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ''கடந்த ஜூன் மாதம் போதிய மழை பெய்யாத நிலையில், ஜூலை மாதம் தொடக்கத்தில் பெய்த மழையை நம்பி நெல் பயிரிட்டோம். தற்போது மழையின்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், நெற்பயிர்கள் கருகின. அவற்றை கால்நடைகளின் மேய்ச்சலுக்காக விட்டுள்ளோம். எனவே மழையின்றி கருகிய பயிர்களைக் கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தென்காசியை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்'' என்று தெரிவித்தனர்.



Next Story