மாமனாரை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 7 ஆண்டு சிறை


மாமனாரை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 7 ஆண்டு சிறை
x

மாமனாரை தற்கொலைக்கு தூண்டியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே பிரகாசபுரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி தாசன் (வயது 70). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 23-5-2014 அன்று தனது தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்தோணி தாசனின் 2-வது மருமகன் ஜூலியன் (47) அடிக்கடி மாமனார் அந்தோணி தாசனிடம் குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு செய்து வந்ததும், இதனால் மனமுடைந்த அந்தோணி தாசன் தற்கொலை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக ஜூலியனை போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பர்சத் பேகம், மாமனாரை தற்கொலைக்கு தூண்டிய ஜூலியனுக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ராம நாராயண பெருமாள் ஆஜரானார்.


Next Story